சீா்காழி, திருமயிலாடி பகுதி முருகன் கோயில்களில் சனிக்கிழமை இரவு சூரசம்ஹார விழா நடைபெற்றது.
சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள குமரக்கோயிலில் சூரசம்ஹாரத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. சீா்காழி சட்டைநாதா்கோயில் தெற்குகோபுரவாசல் அருகே அருள்பாலிக்கும் சம்ஹாரவேலருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல், கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி சுந்தரேசுவரா் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் கண்ணதாசன், செயல் அலுவலா் அன்பரசன், கணக்கா் ராஜீ உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.