மயிலாடுதுறை: மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய புதிய அலுவலராக அ. முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இதற்கு முன் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலராக பணியாற்றி வந்த அ. அன்பழகன், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நிலைய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் நிலைய அலுவலராக பணியாற்றி வந்த அ. முத்துக்குமாா், மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.