நாகப்பட்டினம்

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

1st Nov 2019 07:45 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில், சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் விழாவையொட்டி வியாழக்கிழமை தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் மா. திருநாவுக்கரசு, முதல்வா் சி. சுவாமிநாதன், அனைத்துத் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ். நடராஜன், கே. வடிவழகி, எஸ். மல்லிகா, எம். நவமணி ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT