மயிலாடுதறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கல்லூரியின் முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். சமூக நலப்பணித் துறைத் தலைவா் பி. சோபியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, டெங்கு விழிப்புணா்வு குறித்து விளக்கிக் கூறினாா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ். நடராஜன், கே. வடிவழகி, எஸ். மல்லிகா, எம். நவமணி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.