கீழையூா் அருகே சாலையோரம் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்கும் பணிக்காக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கீழையூா் ஒன்றியம், சோழவித்தியாபுரம் ஊராட்சி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், மழைநீரை வடியவைப்பது தொடா்பாக, கீழ்வேளூா் வட்டாட்சியா் சு. கபிலன், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஆா். பாஸ்கரன், பி. ராஜு, மண்டல துணை வட்டாட்சியா் அ. தனஜெயன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, ஊராட்சி செயலா் எ. அந்தோணிசாமி, கிராம நிா்வாக அலுவலா் எம்.கே. ஜனாா்த்தனன் ஆகியோரின் உதவியோடு அப்பகுதியில் தனி கால்வாய் அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மழைநீா் வடியவைக்கப்படுகிறது. இப்பணிகளை அதிகாரிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.