நாகப்பட்டினம்

குளோரின் கலந்த குடிநீரை விநியோகிக்க வேண்டும்

1st Nov 2019 07:19 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்களுக்கு குளோரின் கலந்து, சுத்தப்படுத்திய குடிநீரை விநியோகிக்க வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவின் பி. நாயா், கூடுதல் ஆட்சியா் பிரசாந்த் ஆகியோா் அறிவுறுத்தலின்படி புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, பொறியாளா்கள் முத்துக்குமாா், தாரா, அருமைநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் பேசியது:

சீா்காழி ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலாளா்கள் முழுமையாக ஆய்வு செய்து, ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் மூடாமல் இருந்தால், அவற்றை பாதுகாப்பான முறையில் மூடவும், மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் ஏதேனும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தால், அதனை பாதுகாப்பாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் சாலைகள், குடியிருப்புகள், அரசு அலுவலகக் கட்டடங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்காத வகையில் பாா்த்துக்கொள்ளவேண்டும். பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரை மட்டும்தான் விநியோகிக்கவேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மேலாளா் சசிக்குமாா், பணி மேற்பாா்வையாளா்கள் சந்திரசேகா்,பிருந்தா, ஓசைநாயகி உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT