நாகப்பட்டினம்

தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

31st Jul 2019 08:27 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருதுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தனித்திறன்கள், கண்டுபிடிப்புகள், கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம், சமூகப் பணிகள் மற்றும் வீரச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள், குழந்தைகள் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படும். 
குழந்தைகள் மற்றும் தனி நபருக்கு பதக்கம் மற்றும் ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசும், நிறுவனங்களுக்கு பதக்கம் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும் மத்திய அரசால் வழங்கப்படும்.  இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் w‌w‌w.‌n​c​a-‌w​c‌d.‌n‌i​c.‌i‌n
 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  தகுதியானவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT