நாகப்பட்டினம்

டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

31st Jul 2019 07:04 AM

ADVERTISEMENT

சீர்காழியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள்டவுன், சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்டம் ஆகியன இணைந்து நடத்திய இப்பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி  தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முரளிதரன் வரவேற்றார். டெம்பிள் டவுன் ரோட்டரி  சங்கத் தலைவர்  பாலாஜி கொடியசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தார். இதில் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை  வழங்கியவாறு சென்றனர். இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் செயலாளர் வீரபாண்டியன், நிர்வாகிகள் மோகனசுந்தரம், வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT