நாகப்பட்டினம்

வீடு தீக்கிரை

30th Jul 2019 06:55 AM

ADVERTISEMENT

கீழ்வேளூர் அருகே மின்கசிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் விவசாயியின் வீடு தீக்கிரையானது.
 கீழ்வேளூர் அருகே உள்ள வளர்த்தாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசம்பந்தம். இவரது வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.  ஞானசம்பந்தமும் அவரது மனைவி சுபாவும் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து தீயை அணைக்க முயன்றனர். மேலும், கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT