மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 85-ஆவது திங்கள் கூட்டம், தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவைத் தலைவர் சி. சிவசங்கரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் க.வெ. மனோகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் இரா. செல்வக்குமார் வரவேற்றார். இதில், சென்னை ராணி மேரி கல்லூரி உதவிப் பேராசிரியை கா.கிருத்திகா "வள்ளுவன் கண்ட சமுதாய சிந்தனை' என்ற தலைப்பில் தொடக்கவுரையாற்றினார். முனைவர் இரா. மாது "நீங்காத செல்வம்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியை, பேரவைப் பொருளாளர் சு. இராமச்சந்திரன், இணைச் செயலாளர் தங்க.செல்வராசு ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினர். பேரவை இணைச் செயலாளர் நா. இமயவரம்பன் நன்றி கூறினார்.