மயிலாடுதுறையில் மணியம்மையார் நூற்றாண்டு கிராமப் பகுத்தறிவு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒன்றியம், நல்லத்துக்குடியில் மாலையிலும், திருவாரூர் சாலை பெரியார் சிலை அருகே இரவிலும் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நா. சாமிநாதன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஞான.வள்ளுவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ. சாமிதுரை, நகரத் தலைவர் சீனி.முத்து, பட்டமங்கல ஊராட்சி திமுக செயலாளர் செல்வமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் யாழ் திலீபன் உரைக்குப்பின் தலைமைக்கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார்.
மூட நம்பிக்கை ஒழிப்பு, நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி சம்ஸ்கிருதத் திணிப்பு ஆகியவற்றை மையப் பொருளாகக் கொண்டு பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் அரங்க.நாகரெத்தினம் நன்றி கூறினார்.
இதில், ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சி.அறிவுடைநம்பி, குத்தாலம் ஒன்றியச் செயலாளர் ம.பாலசுந்தரம், ஒன்றிய துணைத் தலைவர் அ.முத்தையன், ஆசிரியர் சுள்ளான்மேடு ஜெயராமன், ஒன்றிய துணைச் செயலாளர் சித்தாம்பூர் தி.சபாபதி, பகுத்தறிவு ஆசிரியரணி தோழர் எம்.என்.செழியன், மாணவரணி செயலாளர் மதியழகன், இளைஞரணி ஏ.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.