நிறைவாழ்வு பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 26,28 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன மண்டல துணை இயக்குநர் தியாகராஜன், வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வெர்ஜினியா ஆகியோர் பயிற்சியளித்தனர். இப்பயிற்சியில் பங்கேற்ற 35 காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து
கொண்டனர்.