நாகப்பட்டினம்

மடப்புரத்தில் சாலைப் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்

29th Jul 2019 07:37 AM

ADVERTISEMENT

செம்பனார்கோவில் அருகே மடப்புரம் ஊராட்சியில் சாலைப் பணியை விரைந்து முடிக்க மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட மடப்புரம் ஊராட்சி பரகத் தெரு, காதர் தெரு ஆகிய தெருக்களில் 2 கி.மீ. நீளத்துக்கு சாலை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக, அந்த சாலையில் முதல் அடுக்கு செம்மண் போடப்பட்டது. இந்த பணிகள் தொடங்கி சுமார் 16 மாதங்கள் கடத்தும், கடுத்த கட்டமாக தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை.
இதனால்,  வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலையுள்ளது. மழைக் காலம் தொடங்கிவிட்டால் செம்மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடும் எனவே, இந்த சாலைப் பணியை மழைக் காலம் தொடங்கும் முன்பாக விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் மு. ஷாஜஹான் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT