நாகப்பட்டினம்

உப்புசந்தை அம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

29th Jul 2019 07:35 AM

ADVERTISEMENT

செம்பனார்கோவில் அருகே உள்ள கீழையூர் உப்புசந்தை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை அண்மையில் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் குங்கும அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் 508 திருவிளக்குகளில் பெண்கள் தீபமேற்றி திருவிளக்குப் பூஜை நடத்தினர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோயில் ஆய்வாளர் பாலு, செயல் அலுவலர் முருகேசன் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT