கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் வியாழக்கிழமை இரவு மழைப் பெய்தது.
வேதாரண்யத்தில் வெள்ளிக்கிமை காலை 8 மணி நிலவரப்படி 22 மி. மீ. மழை பதிவானது. வேதாரண்யத்தின் தெற்கு கடலோரப் பகுதியான கடிநெல்வயல், பன்னாள், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைப் பொழிவு இருந்தது. குறிப்பாக கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டது. இந்த மழை, கோடை வெப்பத்தில் பாதிக்கப்பட்ட வன உயிரினங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.