பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் எம். கிஷோர். இவர் கடந்த 18- ஆம் தேதி, பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் அங்கு நடைபெற்ற மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான டேக்வாண்டோ போட்டியில் 11 வயதுக்குள்பட்ட சப்-ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார். இதையொட்டி, திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீ. சாந்தி மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியன் உள்ளிட்டோர் மாணவர் எம். கிஷோருக்குப் பாராட்டுத் தெரிவித்து, பரிசுகள் வழங்கினர்.
கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் திருமருகல் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மாநில டேக்வாண்டோ போட்டி:
தங்கப் பதக்கம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு
திருமருகல், ஜூலை 26: பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.