சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் வேளாண்புல மாணவிகள் கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்தரும் பழ வகை, பூச்செடிகளை வழங்கினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள் (ஜி26) கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், கொள்ளிடத்தை அடுத்த ஆச்சாள்புரம் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். இந்த மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உள்ள நவீன முறைகளையும், வேளாண் சாகுபடி முறைகளையும் பயிற்சியளித்து, விவசாயிகளிடமிருந்து இயற்கை விவசாயம் போன்ற முறைகளைக் கற்றறிந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிராம மக்களுக்கு பூச்செடிகள் வழங்கும் நிகழ்ச்சி கிராம நிர்வாக அலுவலர் பவளசந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. முன்னோடி விவசாயி சிவபிரகாசம், மயில்வாகனம் முன்னிலையில் விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் பல்வேறு வகையான பூச்செடிகள், பலன் தரும் மரக்கன்றுகளை வழங்கினர்.