நாகப்பட்டினம்

கருங்கல் சிங்கிணிகுளத்தை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

22nd Jul 2019 07:23 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே  பெருமாங்குழியில் உள்ள சிங்கிணிகுளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பெருமாங்குழி சிங்கிணிகுளம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு உள்ளது. 
கருங்கல் பேரூராட்சியின் முக்கிய  நீராதாரமாக  இருப்பது சிங்கிணிகுளம்.  இந்தக் குளத்து கரையில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட உறை கிணறிலிருந்து கருங்கல் வேன் நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு  நீரேற்றம் செய்யப்படுகிறது.
அங்கிருந்து கருங்கல் சந்திப்பு, சுண்டவிளை, துண்டத்துவிளை, கருமாவிளை, கூனாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது இந்தக் குளத்தை பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரித்து சீரமைக்காத காரணத்தால் இக்குளம் முழுவதும் பாசிபடர்ந்து காணப்படுகிறது.இதனால்,மழை காலங்களில் நீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும்,இக்குளத்தில் உள்ள பாசிகள் வெயில் காலங்களில் அழுகி கெட்டுபோவதால் துர்நாற்றம் வீசி தண்ணீரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி  இக்குளத்தில் உள்ள பாசிகளை அகற்றி தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT