நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட மேனாங்குடி, மூங்கில்குடி கிராமத்தில் பாசனதாரர் சங்கம் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர்த. ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
ரூ. 10 லட்சம் செலவில் மேனாங்குடி பாசன வாய்க்கால் தலைப்பு புனரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆட்சியர் த. ஆனந்த் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்து வாய்க்கால் தூர்வாரப்படும் அளவீடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மூங்கில்குடி கிராமத்தில் ரூ. 9.90 லட்சம் செலவில் நடைபெறும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து, பாசனதாரர் சங்க பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி பணிகள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கோட்டாட்சியர் முருகதாஸ், வட்டாட்சியர் திருமால் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.