நாகப்பட்டினம்

24-இல் சிறப்பு குறைதீர் கூட்டம்

18th Jul 2019 12:28 AM

ADVERTISEMENT


நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. நாகை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீர்வு பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT