வேதாரண்யம் பகுதியில் கஜா புயலின்போது உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய கமிட்டி உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான பி.வி.ராசேந்திரன் தலைமை வகித்தார்.
கஜா புயலின்போது உயிரிழந்த பஞ்சநதிக்குளம் மேற்கு அ. சோமசுந்தரம், மணியன்தீவு மாரியப்பன், பிராந்தியங்கரை ராஜம்மாள் கணவர் உள்ளிட்ட மூவரது குடும்பத்தினருக்கு தலா ரூ.1லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
முன்னதாக, முன்னாள் முதல்வர் காமராஜரின் படம் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் நாகை தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் எம்.ஆர். ஜெகநாதன், நகரத் தலைவர் ஜி.வைரவன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சி.கே.போஸ், துணைத் தலைவர் அர்ச்சுணன், அமிர்ஜான், ஆர்.இ.எம்.ரபிக், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.