ஆட்டோவில் புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் கடத்தி வந்தவர் சீர்காழி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் உத்தரவின்பேரில், சீர்காழி காவல் உதவிஆய்வாளர் ராஜா மற்றும்போலீஸார் சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து 180மி.லி. அளவு கொண்ட 1,224 மதுப் புட்டிகள் கடத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோவுடன் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், மது கடத்தலில் ஈடுபட்டதாக சீர்காழி பிடாரி வடக்கு வீதியைச் சேர்ந்த கு. மூர்த்தி (33) என்பவரை கைது செய்தனர்.