நாகப்பட்டினம்

ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

15th Jul 2019 09:05 AM

ADVERTISEMENT

ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ஒன்றரை லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  
நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்க ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானத்துடன் பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
சங்க நாகை தெற்கு மாவட்டத் துணைத் தலைவர்ஜி. சுந்தரபாண்டியன் தலமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்க மாவட்டத் தலைவராக எஸ். ராமலிங்கம், துணைத் தலைவராக ஏ. திருநாவுக்கரசு, இணைச் செயலர்களாக வீ. தங்கவேல்,  எம். பன்னீர்செல்வம், வி. ஆர். சிவபெருமாள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT