நாகப்பட்டினம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

12th Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

சீர்காழியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.
சீர்காழி நகராட்சி, ரோட்டரி சங்கம், பரஞ்ஜோதி ஜூவல்லரி, குட்லக் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் சாமி.செழியன், நகராட்சி பொறியாளர் மெய்பொருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் பங்கேற்று, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிப் பேசினார்.
தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், நிலத்தடிநீர்மட்டத்தை உயர்த்துவது குறித்தும், வீடுகள், வர்த்தகக் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்தும் பொறியாளர்கள் செல்வக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் விளக்கமளித்தனர். ரோட்டரி நிர்வாகிகள் சிவகுரு, பிரசாந்த்க்குமார், ஜெய்சங்கர், முன்னாள் தலைவர் பாஸ்கரன், வழக்குரைஞர் செல்வராஜ், பசுமை இயக்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT