நாகப்பட்டினம்

கல்லூரி மாணவரை காணவில்லை

12th Jul 2019 10:10 AM

ADVERTISEMENT

நாகை அருகே கல்லூரி மாணவர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வடக்காளத்தூர், வடக்குத்தெருவைச் சேர்ந்த பாரதி என்பவர் மகன்  மாரிமுத்து (17).  இவர்,  நாகை பாப்பாகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ஆம்ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 2- ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டை வீட்டு வெளியேறியவர் பின்னர் வீட்டுக்குத் திருப்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் மாரிமுத்து கிடைக்கவில்லையாம். 
இது குறித்து, மாரிமுத்துவின் தாயார் பா. மல்லிகா அளித்தப் புகாரின் பேரில், கீழ்வேளூர் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, மாயமான  மாணவரை
தேடிவருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT