கீழ்வேளூர் அருகே நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வனமகா உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய பசுமைப்படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பி.பரமேஸ்வரி தலைமை வகித்தினார். அறிவியல் ஆசிரியர் சீனிவாசன் வனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அருள்செல்வம், லோகநாதன், செல்வரெத்தினம், சங்கரவடிவேல் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய பசுமைப் படை ஆசிரியர் அருள்ஜோதி நன்றி கூறினார்.