நாகப்பட்டினம்

உதயநிதி நியமனம்: திமுகவினர் கொண்டாட்டம்

6th Jul 2019 01:03 PM

ADVERTISEMENT

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை பேருந்து நிலையம் முகப்பில் உள்ள அண்ணா சிலை முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலாளர் குண்டாமணி என்.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஜெக.வீரபாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்குரைஞர் சிவதாஸ், மாவட்ட பிரதிநிதி ஜனதா. பாலு, நகர துணைச் செயலாளர் ஆர்.கே.சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மனோவா சாம்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT