பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொது விநியோகத் திட்டத்துக்குத் தனித் துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டப் பணிகளை 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும், அனைத்துப் பணியாளர்களையும் நிபந்தனையின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ். பிரகாஷ் தலைமை வகித்தார். சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் சுரேஷ்கண்ணா, அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கஜபதி நன்றி கூறினார்.