நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் பலத்த கடற்காற்று: மீன்பிடித் தொழில் பாதிப்பு

4th Jul 2019 08:54 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தைவிட வேகமாக கடற்காற்று வீசி வருவதால் மீன்பிடித் தொழில் புதன்கிழமை பாதிக்கப்பட்டது. 
வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசி வருகிறது. கடந்த சில நாள்களாக காற்றின் வேகம் சற்று குறைவாக இருந்து வந்தன. இந்நிலையில், சில நாள்களாக மீண்டும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது, மரங்கள் கம்பிகளில் அடிபடுவதால், காற்றில் கலந்து வந்து கம்பிகளில் படியும் உப்பு மணல் துகள்களால் ஏற்படும் ரசாயன மாற்றம் போன்றவைகளால் சீரான மின் விநியோகம் இல்லாமல் அவ்வப்போது மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை காலை முதல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. கற்றில் புழுதி மணல் கலந்து வெளியேறுவதால் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீன்பிடித் தொழிலில் புதன்கிழமை பாதிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT