நாகப்பட்டினம்

கருங்கல் திருப்பணியில் ஜொலிக்கும் கருப்பம்புலம் வீரகோதண்டராமர் கோயில்: 8-இல் குடமுழுக்கு

4th Jul 2019 08:55 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் வீரகோதண்டராமர் கோயில் கருங்கற்களால் திருப்பணிகள் நிறைவுடைந்து புதிய பொலிவுடன் ஜொலிக்கும் நிலையில் ஜூலை 8-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
கருப்பம்புலம் வீரகோதண்டராமர் கோயில் பழைமை வாய்ந்த சிறப்புக்குரியது. இக்கோயிலில் காணப்படும் உலோகத்தாலான சுவாமி சிலைகள், அன்னிய படையெடுப்பின்போது அக்காலத்தில் வாழ்ந்தவர்களால் மண்ணுக்குள் மறைத்து வைக்கப்பட்டு, அதன் அருகே புன்னை மரம் விதைக்கப்பட்டிருந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு மரத்தின் வேர் முனையில் தோன்றி கிடைக்கப்பட்டதாக கோயில் வரலாறு
கூறுகிறது.
சீதாதேவி, ராமன், லட்சுமணன், திருமங்கை ஆழ்வாரோடு கிடைக்கப்பெற்ற சுவாமிகளோடு பல ஆண்டுகளாக கம்ப சேவை உத்ஸவங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து, ஆண்டுதோறும் சித்திரை நவமி 10 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்கு, வீரகோதண்டராமர் திருமேனி திரமார்பில் லகஷ்மிதேவி வலது மார்பிலும், முப்பிரி நூல் இடது மார்பிலும் அலங்கரிப்பது சிறப்பு தரிசனம். இக்கோயில் முழுமையும் கருங்கற்களால் திருப்பணி செய்யும் பணி அண்மையில் நிறைவடைந்தது. கோயிலின் கருவறை  இடைநாளி, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், திரிதள ராஜகோபுரம் என கருங்கற்கள் வேலைபாடுகளால் ஜொலிக்கிறது.
குடமுழுக்குக்கான சிறப்பு பூஜைகள் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கி நடைபெறும். ஜூலை 8-ஆம் தேதி காலை 9.20 மணிக்கு மேல் 10.30-க்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை தர்மகர்த்தாவும், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் கருப்பாம்புலம் பி.வி. குழந்தைவேல் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT