நாகப்பட்டினம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

4th Jul 2019 08:53 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட்தில் 40,689 வீடுகள் கட்டப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரக வளச்சித்துறை அலுவலர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு வீடுகள் கட்டும் பணிக்காக மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் புதிய ஊழியர் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகை: நாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்  சங்க நாகை வட்டத் தலைவர் பி. குமரேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் பி.அந்துவண்சேரல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர்கள் எஸ்.ஜோதிமணி, முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஜம்ருத் நிஷா, நகராட்சி ஊழியர் சங்க வட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன்ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்: கீழ்வேளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நாகை மாவட்டத் தலைவர் மா. ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் புகழேந்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சங்க வட்டத் தலைவர் செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், திருமருகல், கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

சீர்காழியில்...
சீர்காழி, கொள்ளிடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரகவளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வட்டாரத் தலைவர் அந்தோணிஆசிர்வாதம் தலைமை வகித்தார். இதில், பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்று கோஷம் எழுப்பினர். 
செம்பனார்கோவிலில்...
பொறையாறு, ஜூலை 3: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வட்டாரத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தணிக்கையாளர் மாரி. தட்சணாமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் பொன்ராஜ், வட்டாரத் தலைவர் ஜீவா, வட்டச் செயலாளர் வாசுகி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருண், மண்டல துணை வட்டார வளர்ச்சி நல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT