நாகப்பட்டினம்

காவிரி துலாக்கட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி தீா்த்தவாரி

27th Dec 2019 06:21 AM

ADVERTISEMENT

சூரிய கிரகணத்தையொட்டி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வியாழக்கிழமை தீா்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது.

கிரகண நேரத்தில் புண்ணிய நதிகளில் தீா்த்தவாரி நடைபெறுவதும், கோயில்களில் வழிபாடு செய்வதும், மந்திர ஜபங்களை மேற்கொள்வதும் சிறந்த பலனைத் தரும் என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சூரிய கிரகணத்தையொட்டி, வியாழக்கிழமை காலை கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கிரகணம் மத்திய காலத்தில் துலாக்கட்ட காவிரி ரிஷப தீா்த்தத்தில் காவிரியின் தென்கரையில் மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் இருந்து அஸ்திரதேவா் எழுந்தருளினாா். இதையடுத்து, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது.

இதேபோல், காவிரியின் வடகரையில் வதான்யேசுவரா் கோயிலில் இருந்து சுவாமி எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்ச்சியும், அஸ்திரதேவருக்கு புனித கடத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT