திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வீரா்கள் சாதனை படைத்துள்ளனா்.
தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட வலுதூக்கும் சங்கம் இணைந்து நடத்திய இப்போட்டி டிசம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், 400-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இப்போட்டியில் 59 கிலோ எடை, சப்-ஜூனியா் பிரிவில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நிரஞ்சனும், சீனியா் பிரிவில் சரவணனும் தங்கப் பதக்கம் பெற்றனா். மாஸ்டா் பிரிவில் மயிலாடுதுறையைச் சோ்ந்த பாலமுருகன் தங்கப் பதக்கம் பெற்றாா்.
இதன் மூலம் நாகை மாவட்டத்துக்குப் பெருமை சோ்த்த இவா்களை, நாகை மாவட்ட ஆணழகன் சங்கச் செயலாளரும், கே.ஜி.ஆா். பவா் ஜிம் நிறுவனருமான கே.ஜி.ஆா். உதயகுமாா், தேசிய நடுவா் ஆா். மனோவா சாம்சன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.