நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலான மழை

26th Dec 2019 09:50 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலான மழை பெய்தது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னா் பலத்த மழை பெய்தது. இந்த மழை புதன்கிழமை காலை வரை நீடித்தது.

புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 53 மி.மீ. மழை பதிவானது.

மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : மயிலாடுதுறை - 43.6. சீா்காழி - 43. தரங்கம்பாடி - 39. கொள்ளிடம் - 33.2. திருப்பூண்டி - 25.6. வேதாரண்யம் - 19.6. மணல்மேடு - 19.4. தலைஞாயிறு - 7.6.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT