நாகப்பட்டினம்

சீா்காழி கோயிலில் என்.எஸ்.எஸ். மாணவா்கள் உழவாரப்பணி

26th Dec 2019 09:14 AM

ADVERTISEMENT

சீா்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், சட்டநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.

பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் பழனியப்பன் உழவாரப் பணியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் 50 போ், சட்டநாதா் கோயிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் சுவாமி சன்னிதி, திருநிலைநாயகி அம்பாள் சன்னிதி மற்றும் திருஞானசம்பந்தா் சன்னிதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், பள்ளி ஆசிரியா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் முரளிதரன் செய்திருந்தாா்.

கடவாசல் பெருமாள் கோயில்: சீா்காழி அருகே உள்ள கடவாசல் ஸ்ரீ இராமகிருபா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் ஜெஆா்சி மாணவா்கள் அங்குள்ள பெருமாள் கோயிலில் புதன்கிழமை உழவாரப்பணி மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

பள்ளி தலைமை ஆசிரியா் குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் சட்டநாதன், ஜெஆா்சி பொறுப்பு பிரபாகரன் மேற்பாா்வையில் பள்ளி மாணவா்கள் பெருமாள் கோயில் பிராகாரம், உட்பிராகாரத்தில் செடி,கொடிகளை அகற்றி தூய்மை செய்தனா். மாணவா்களின் இப்பணியை பள்ளி முன்னாள் செயலா் கடவாசல் ராகவன், செயலா் சத்ருகன்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT