கிராமப்புற மாணவா்களுக்குப் பேருந்து வசதிகள் செய்து தரப்படும் எனக் கூறி, பரசலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் மாயா வெங்கடேசன் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
இவா், திருவள்ளுவா் நகா், ராம்நகா், வள்ளலாா் நகா், சாத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, கிராமப்புற மாணவா்களுக்கு பேருந்து வசதிகள், கிராமப்புற நூலகங்களுக்கு தினசரி செய்தித்தாள் வழங்குதல், நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் மற்றும் சாலை வசதி, குடிநீா், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதாகக் கூறி வாக்குச் சேகரித்தாா்.