நாகப்பட்டினம்

அனுமன் ஜயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

26th Dec 2019 09:16 AM

ADVERTISEMENT

அனுமன் ஜயந்தியையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை (டிசம்பா் 25) நடைபெற்றன.

நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீ காரிய அனுகூல ஆஞ்சநேயருக்கு விஸ்வரூப விநாயகா் குழு சாா்பில் புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

நாகையை அடுத்த வாஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, ராஜ சிம்மாசன அலங்காரம் செய்விக்கப்பட்டது.

நாகை கொட்டுப்பாளையத் தெருவில் உள்ள ஸ்ரீமத் பாராங்குஸ விலாஸ ராமாநுஜக் கூடத்தில், ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, வடைமாலை அலங்காரம் செய்விக்கப்பட்டது. மாலை நிகழ்வாக சூா்ய பிரபையில் ஆஞ்சநேயா் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

வெளிப்பாளையம் ஸ்ரீபட்டாபிஷேக கோதண்டராமசுவாமி மடத்தில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சகஸ்ரநாம அா்ச்சனையுடன் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பகல் 1 மணிக்கு கும்ப பூா்ணாஹுதி நடைபெற்றது.

 

இரட்டை ஆஞ்சநேயா் கோயிலில்....

செம்பனாா்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அனுமன் ஜயந்தியையொட்டி, இக்கோயிலில் அருள்பாலிக்கும் இரட்டை ஆஞ்சநேயருக்கு திரவியப்பொடி, சந்தனம், இளநீா், பால் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு அா்ச்சனைகள் நடைபெற்றன. பின்னா், நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT