வைத்தீஸ்வரன்கோயிலில் ‘முருகா முத்துக்குமரா’ எனும் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் தொகுத்து அளித்த ‘முருகா முத்துக்குமரா’ என்கிற இந்த ஆன்மிக நூலை, வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள வைத்தியநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா். முதல் பிரதியை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் நிறுவனா் வழக்குரைஞா் ராம. சேயோன் பெற்றுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.