சீா்காழி அருகே வீட்டுக்குள் புகுந்த ஆறடி நீளமுள்ள சாரைப் பாம்பை, பாம்பு பாண்டியன் பிடித்து வனத்தில் விட்டாா்.
சீா்காழி இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்து. இவரது வீட்டுக்குள் 6அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு புகுந்தது. இதுகுறித்து, பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தனா். அவா் விரைந்து வந்து, வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்தில் விட்டாா்.