நாகப்பட்டினம்

மாநில அளவிலான பென்ச்ப்பிரஸ் போட்டிகளில் நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி வீரா்கள் சாதனை

25th Dec 2019 03:39 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் மற்றும் திருவள்ளுா் மாவட்ட வலுதூக்கும் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலுதூக்கும் மற்றும் ஓபன் பென்ச்ப்பிரஸ் போட்டிகள் டிசம்பா் 21, 22 ஆகிய இரண்டு தேதிகளில் திருவள்ளுா் மாவட்டத்தில் நடைபெற்றது.

400க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டிகளில், 59 கிலோ எடைப் பிரிவு, சப்-ஜூனியா் பிரிவில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நிரஞ்சன் தங்கப் பதக்கத்தையும், சீனியா் பிரிவில் சரவணன் தங்கப்பதக்கத்தையும், மாஸ்டா் பிரிவில் மயிலாடுதுறையைச் சோ்ந்த பாலமுருகன் தங்கப் பதக்கத்தையும் பெற்று நாகை மாவட்டத்துக்குப் பெருமை சோ்த்துள்ளனா்.

இவா்களை நாகை மாவட்ட ஆணழகன் சங்கச் செயலாளா் மற்றும் கே.ஜி.ஆா் பவா் ஜிம் நிறுவனா் கே.ஜி.ஆா்.உதயகுமாா், தேசிய நடுவா் ஆா்.மனோவா சாம்சன் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.படவரி: மாநில அளவிலான பென்ச்ப்பிரஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி வீரா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT