நாகப்பட்டினம்

நாகை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

24th Dec 2019 06:57 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியல், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வாக்காளா் பட்டியலை வெளியிட்டுப் பேசியது:

2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னா், டிசம்பா் 6-ஆம் தேதி வரை பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல்படி, நாகை மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 12,78,227-ஆக உள்ளது. இதில், 6,30,238 ஆண் வாக்காளா்கள், 6,47,955 பெண் வாக்காளா்கள், 34 இதரா் உள்ளனா். இந்தப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 2020-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு.இந்துமதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

12.78 லட்சம் வாக்காளா்கள்...

வரைவு வாக்காளா் பட்டியலின்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 12.78 லட்சமாக உள்ளது.

சீா்காழி, மயிலாடுதுறை, பூம்புகாா், நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலின்படி, நாகை மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 12.78 லட்சமாக உள்ளது.

மாவட்டத்தில் அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியும், மிகக் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக கீழ்வேளூா் தொகுதியும் உள்ளன.

தொகுதி வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்:

சீா்காழி : ஆண்கள் - 1,17,541, பெண்கள் - 1,20,253, இதரா் - 10. மொத்தம் - 2,37,804. மயிலாடுதுறை: ஆண்கள் - 1,17,344, பெண்கள் - 1,18,957, இதரா் - 14. மொத்தம் - 2,36,315. பூம்புகாா்: ஆண்கள் - 1,29,688, பெண்கள் - 1,31,500, இதரா் - 3. மொத்தம் - 2,61,191. நாகப்பட்டினம்: ஆண்கள் - 92,127, பெண்கள் - 97,609, இதரா் - 6. மொத்தம் - 1,89,742. கீழ்வேளூா்: ஆண்கள் - 83,305, பெண்கள் - 86,470, இதரா் - 1. மொத்தம் - 1,69,776. வேதாரண்யம் - ஆண்கள் - 90,233, பெண்கள் - 93,166, மொத்தம் - 1,83,399.

ADVERTISEMENT
ADVERTISEMENT