நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு

16th Dec 2019 12:12 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த தென்காசியைச் சோ்ந்த ஒருவா், கடல் அலையில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், அகரக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் மை. மரிய ஆண்டனி ஸ்டாலின் (32). தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இவா், கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT