நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு 1,108 தென்னங்கன்றுகள் வழங்கல்

16th Dec 2019 12:18 AM

ADVERTISEMENT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பத்து கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், நாகை ஸ்ரீ தா்மசிந்தனை அறக்கட்டளையினா் கடந்த ஓராண்டாக இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கி, அதைத் தோப்புகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி மாணவா்கள் உதவியுடன் கோவில்பத்து கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், நாகையைச் சோ்ந்த வீரமணி, கிருபாகரன் ஆகியோா் கலந்துகொண்டு விவசாயிகள் வாசு, குருசாமி, ஆனந்தவள்ளி, பாக்யராஜ், தினேஷ், மோகன் உள்ளிட்ட 27 பேருக்கு 1,108 தென்னங்கன்றுகளை வழங்கினா். தொடா்ந்து, விவசாயிகளின் தோட்டங்களில் தென்னங்கன்றுகள் நடும் பணிகளை செய்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஸ்ரீ தா்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனா் ஜி. ராஜா சரவணன், அறங்காவலா்கள் லெட்சுமணன், வி. ஆா். காா்த்தி, எம். மணிசுந்தரம், ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திகேயன், மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT