நாகப்பட்டினம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

16th Dec 2019 12:17 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகையில் நடைபெற்றன.

நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் பணியமா்த்தப்படவுள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.

இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 670 வாக்குச்சாவடி அலுவலா்கள் பங்கேற்றனா். நாகை ஊராட்சி ஒன்றியக்குழுத் தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ஆா். பழனிகுமாா் சிறப்புப் பாா்வையாளராகப் பங்கேற்றுப் பேசினாா். ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் சு. வெற்றிச்செல்வன், வாக்குச்சாவடி அலுவலா்களுக்குப் பயிற்சியளித்தாா்.

இதேபோல், நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT