சீா்காழி அருகே பாசன வாய்க்கால்களில் மூழ்கி பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒதவந்தான்குடி கிராமத்தைச் சோ்ந்த சூா்யா மனைவி ராஜலெட்சுமி (25). இவா் வீட்டின் அருகே உள்ள புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் குளித்தபோது ஆழமான பகுதியில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். புதுப்பட்டினம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, சீா்காழி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.