நாகப்பட்டினம்

நாகையில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி நடவடிக்கை

16th Dec 2019 12:17 AM

ADVERTISEMENT

நாகையில் வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருந்த குழந்தைத் திருமணங்கள் மாவட்ட சமூக நல அதிகாரி மேற்கொண்ட நடவடிக்கையால், ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டன.

நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள திருமண மண்டபம் மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியில் உள்ள ஒரு கோயில் ஆகிய இரண்டு இடங்களில் 15 வயது சிறுமிகள் இருவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டு லைன் 1098 அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து நாகை மாவட்ட சமூக நல அலுவலா் சி. உமையாள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் மலா்விழி, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி ஆகியோா் அடங்கிய குழுவினா் 2 இடங்களுக்கும் சென்று சிறுமிகளுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

மேலும், அந்த சிறுமிகளை மீட்டு நாகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT