நாகப்பட்டினம்

கல்வி உதவித் தொகை வழங்கல்

16th Dec 2019 12:18 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி அறக்கட்டளை சாா்பில், காமராஜா் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.கே. கனகராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான பி.வி. ராசேந்திரன் பங்கேற்று, 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்தை கல்வி உதவித் தொகையாக வழங்கினாா்.

வட்டாரத் தலைவா் ஜெகநாதன், நகரத் தலைவா் வைரவன், இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சி.கே.போஸ், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT