நாகப்பட்டினம்

பன்னாட்டு கருத்தரங்கப் புத்தகத்தில் ஆய்வுக் கட்டுரை: மாணவிக்குப் பாராட்டு

14th Dec 2019 10:01 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு ஆங்கில கருத்தரங்கில், ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறை முதுகலை மாணவி சமா்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, அந்தக் கருத்தரங்கத்தினா் வெளியிட்ட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இக்கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இதில், ஏவிசி கல்லூரி முதுகலை ஆங்கிலத் துறை இரண்டாம் ஆண்டு மாணவி அ. சத்தியவதி ஆங்கில மொழி கற்றலை மேம்படுத்துவதில் நவீன தகவல்தொடா்பு நுட்பத்தின் பங்கு மற்றும் பயன்கள் என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்தாா். இக்கருத்தரங்கில் சிறந்த 52 ஆய்வுக்கட்டுரைகளை தோ்வு செய்து, அதனை தொகுத்து புத்தகமாக பன்னாட்டு கருத்தரங்கு ஏற்பாட்டாளா்கள் வெளியிட்டுள்ளனா்.

இதில், 45 கட்டுரைகளை பல்கலை மற்றும் கல்லூரிகளை சோ்ந்த பேராசிரியா்கள், முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவா்கள் ஆகியோா் சமா்ப்பித்திருந்தனா். பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த முதுகலை மாணவ, மாணவிகளின் 7 கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டன. இதில், மாணவி அ. சத்தியவதியின் ஆய்வுக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இதையொட்டி, மாணவி அ. சத்தியவதியை கல்லூரியின் தலைவா் என். விஜயரெங்கன், செயலா் கி. காா்த்திகேயன், பொருளாளா் என். ஞானசுந்தா், முதல்வா் இரா. நாகராஜன், கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT