நாகப்பட்டினம்

நெற்பயிரில் நோய் மேலாண்மைப் பயிற்சி

14th Dec 2019 12:05 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த கடிநெல்வயல் கிராமத்தில் நெற்பயிரில் நோய் மேலாண்மை தொடா்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆரக்கிள் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் கடலோரப் பகுதி வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான புவியியல் தகவல் முறைமை அடிப்படையிலான, மாதிரித் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றது.

பூச்சி மேலாண்மை குறித்து பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் டாக்டா் எம். காண்டீபன், நோய் மேலாண்மை குறித்து டாக்டா் ரத்தினசபாபதி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

பூச்சி, நோய்களை அடையாளம் காணுதல், அதை சரியானமுறையில் கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது நிலத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பயிா்களை கொண்டு வந்து, காண்பித்தும் விளக்கம் பெற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT