நாகப்பட்டினம்

பரிமள ரெங்கநாதா் கோயிலில் தூய்மை பணி

11th Dec 2019 08:04 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகேயுள்ள ஏவிசி கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் அண்மையில் தூய்மை பணியில் ஈடுபட்டனா்.

கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். என்சிசி அதிகாரி சி. பாலாஜி முன்னிலை வகித்தாா். மத்திய அரசின் பல மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான ஸ்வட்ச் பக்வாடா 2019 திட்டத்தின் மூலம் பொது இடங்களை தூய்மைப் படுத்தும் நோக்கத்தில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியின் என்சிசி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஏகாதசியையொட்டி, திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT